BE POSITIVE

<>GOD HAS CREATED YOU TO THIS WORLD TO DO SOME TASK WHICH CAN'T BE DONE BY BILLIONS AND BILLIONS OF PEOPLE---SO YOU ARE UNIQUE

Wednesday, 17 October 2012


மகாகவி பாரதி

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையானபின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ??..

Friday, 12 October 2012

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......!

 ::::இந்தியா அன்றும் இன்றும் ::::

     '' இந்தியா எனது தாய் நாடு...!
         இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்...!"
 
வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவைகள்...!
நம்  அனைவரையும் "நாம் இந்தியன்" என பெருமை பட வைத்த சக்திகள்...!!!

1947 ஆம் ஆண்டுக்கு முன்பு
  • இன்றைய அதிவேக தொழில் நுட்பம் இல்லை நம்மிடம்...!!
  •  அடுத்த நொடியை தகவலை தெரிவிக்க உதவும் தொலைபேசி இல்லை நம்மிடம்...!!!
  • நேருக்கு நேர் நடந்ததை விவரிக்கும் தொலைக்காட்சியும்,இணைய வசதியும் இன்றைப் போல இல்லை நம்மிடம்...!!!!!
       "  இருந்தும் போராடினோம் ஒன்றாக சம பலம் கொண்டு ...!
               வெற்றியும் பெற்றுவிட்டோம் பல உயிர் தந்து .."










 பலர் தந்த உயிர் தியாகம் இன்றோ வரலாற்று படமாக மட்டுமே நம் மனதில்..!

சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் "   இந்தியா வளர்ந்து வரும் நாடு.....!" '

காரணம்  நிச்சயம் நாமாக மட்டுமே இருக்க முடியும் ......!

உலகின் பணக்கார நாடுகளில் இந்தியாவும் ஒன்று...
உலகின் ஏழை நாடுகளிலும் இந்தியா ஒன்று...!

 ________________________________________________________________________________

நம்மால் முடியாதது என்ன???

 " வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் இந்தியா..!
     நம்மை ஒன்றாக இணைத்த மொழி இந்தியா..!"

"   முடியாது என்பது எங்கள் அகராதியில் இல்லை 
     என்று உலகிற்கு உரைத்த தேசம் இந்தியா ....! "

' அணு உலை ஆராய்ச்சி முதல் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறமை வரை'
உலகில் எந்த நாட்டிற்கும் சளைத்தவர்கள் அல்ல நாம்...!

தேவையான மக்கள் பலமும்,பண பலமும்,நாளைய இளம் தலை முறையும் குறையாமல் உண்டு நம்மிடம்....

தூங்கி கொண்டிருக்கும் நாம் அனைவரும்
எழுச்சி கொண்டால் ,உலகமே வியக்கும்  வளர்ச்சி கொள்வோம்.. !!!

 _____________________________________________________________________________

செய்த தவறுகள்  என்ன ....!?

நம்முடைய உழைப்பை  பயன்படுத்தி முன்னேறி கொண்டிருக்கும் நாடுகள் பல..

இந்தியா  திறமையானவர்கள் இல்லாத நாடு இல்லை....திறமையானவர்களை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்து விட்டு ஏமாந்து கொண்டிருக்கும்  நாடு..!

நம் உழைப்பை! நம் பொருட்களை!! நம்முடையை அறிவை!!!
நாம் இங்கு பயன்படுத்தியிருந்தால் இந்தியா இன்று ஒரு வளர்ந்து விட்ட நாடு..!!!!

இவை போக,நம்மை பயமுறுத்தும்  தீராத தலைவலிகள் :
  • லஞ்சம் 
  • ஊழல் 
  • மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் 
  • மின் உற்பத்தி குறைபாடு 
  • மற்றும் பல....
இதை மாற்ற யார் வருவார்கள்?????
உண்மையில்,யாருமே  வர மாட்டார்கள்.....!

அனைவருமே, தன்னை விட மற்றவர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்து உள்ளோம்...! 'உன்னை விட திறமையானவர்கள் இந்த உலகில் யாருமே இல்லை 'என்ற உண்மையை  மட்டும் யாரும் நம்ப மறுக்கிறோம்....!!


"உன்னை நீ மாற்றி கொள் உலகம் தானாகவே மாறி  விடும்.."

"மாற்றம்  ஒன்றே மாறாதது-எனவே நமது நாட்டை  மாற்றும் கடமை நம்முடையது"

நம்மை நாளும் தலையில் சுமக்கும் நம் தாய் நாட்டை.....
தலை நிமிர செய்ய முடியாவிட்டாலும் ,யார் முன்னும் 
தலை குனிய மட்டும் விட்டு விட கூடாது....! 

தாய் நாட்டிற்காக எனது முதல் பணி ...
நன்றி,
நாம் இந்தியர்.. 


Saturday, 6 October 2012

சொர்க்கம்



“சொர்க்கம் என்பது வசதிகளை பெருக்கிக்கொள்வதில் இல்லை ,

 தேவைகளை குறுக்கிக்கொள்வதில் உள்ளது”

அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்

இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்..
பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்..
கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்...
சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்...
வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்...
சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்...
தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்...
பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்...
உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்...
உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...